வடகாடு பகுதியில் மழையால் சாய்ந்த நெற்பயிர் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

வடகாடு பகுதியில் மழையால் சாய்ந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-01-01 17:57 GMT
வடகாடு:
நெற்பயிர் சாய்ந்தது
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலமாக, தாளடி சம்பா நெற்பயிர்களை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது ஒருசில பகுதிகளில் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற் பயிர்கள் இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடை செய்ய முடியாமல், நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து முளைத்து வர துவங்கியுள்ளது. இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர். 
கோரிக்கை 
இது குறித்து வடகாடு தெற்குப்பட்டியில் விவசாயி குணசேகரன் கூறுகையில், நல்ல முறையில் அதுவும் இயற்கை முறையில் விளைந்து வந்து அறுவடை செய்ய தயாராக இருந்த தூயமல்லி நெற் பயிர்கள் கடந்த வாரம் இப்பகுதிகளில் வீசிய காற்றின் காரணமாக சாய்ந்தது. தற்போது இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்கதிர்கள் முளைத்து வரத்துவங்கியுள்ளதால் செய்வதறியாது தடுமாறி வருவதாகவும், பயிர் காப்பீடு செய்துள்ளதாக கூறினர். மேலும் இப்பகுதிகளில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க அரசு முன் வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்