ரூ.5 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல்
மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
மினிலாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் மேற்பார்வையில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், திம்மாம்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், ஆம்பூர் டவுன் போலீசார் குமரன், ஆம்பூர் போக்குவரத்துப் பிரிவு போலீசார் ஜெகதீஸ்வரன், நாட்டறம்பள்ளி போலீசார் லட்சுமிபுரம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குட்கா, பான்மசாலா, புைகயிலை பாக்கெட்டுகள் என 50 மூட்டைகளில் கர்நாடகத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததாக டிரைவர் கூறினார்.
கைது
இதையடுத்து மினி லாரி டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் அஞ்சுகம்நகர் கிஷ்கிந்தா ரோடு பகுதியைச் சேர்ந்த குட்டபழனியின் மகன் முத்து (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மினிலாரி, ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, புைகயிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.