திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் புத்தாண்டு தரிசனம்
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காவேரிப்பாக்கம்
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளை ஒருசேர தரிசித்தால் சித்திரகுப்தன் எழுதி வைத்த பாவங்கள் விமோசனம் கிடைக்கும் என்பது கோவிலின் ஐதீகமாக இருந்து வருகிறது. கோவிலில் லிங்க அடிபாகத்தின் மீது பிரசன்ன வெங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கோவிலில் நேற்று காலை மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு தரிசனம் நடந்தது. அதையொட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆதாரனை நடந்தது. பல வண்ண மலர் மாலைகளால் மூலவர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருள் பாலித்தார். பொதுமக்கள், பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
வருகிற 13-ந்தேதி போகி பண்டிகையுடன், வைகுண்ட ஏகாதசி வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.