ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது

Update: 2022-01-01 17:24 GMT
மத்தூரை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 27). விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல கொட்டகைக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் கொட்டகையில் இருந்த 2 ஆட்டை திருடி வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதை பார்த்த சிவபாலன் கூச்சலிடவே அந்த வாலிபர்களில் இரண்டு பேர், இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். அங்கிருந்த மற்றொரு வாலிபர் பிடிபட்டார். பின்னர் அவர் மத்தூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் ைகது செய்தனர். விசாரணையில் சிக்கியவர் ஆம்பள்ளி கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (21) என்பதும், தப்பியோடியவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (25), அருணகிரி (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்