சங்கராபுரத்தில் முகவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்
சங்கராபுரத்தில் முகவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்
சங்கராபுரம்
சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.50 அபராதம் விதித்து வசூல் செய்தனர். பின்னர் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி முககவசம் வழங்கினர்.