திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

Update: 2022-01-01 17:18 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே செட்டிதாங்கல் கிராமத்தில் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது அங்குள்ள  கோழி கடையின் பின்புறம் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த கனகநந்தல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டு மகன் ரகு (வயது 36) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்