பஸ்கள் மோதல் 20 பேர் காயம்

வடுவூர் அருகே பஸ்கள் மோதியதில் 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-01 17:06 GMT
வடுவூர்:
வடுவூர் அருகே பஸ்கள் மோதியதில் 20 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பஸ்கள் மோதல்
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள்  சுற்றுலா பஸ்சில் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 
அப்போது மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலம் உடையார் தெரு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே தஞ்சையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சுற்றுலா பஸ் மீது மோதியது. 
20 பேர் காயம் 
இதில் அரசு பஸ்சி்ன் கண்டக்டர் கோட்டூரை சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது 48) மற்றும் உள்ளிக்கோட்டையை சேர்ந்த நெடுஞ்செழியன் (58), திருச்சியை சேர்நத  பாரதி (51) உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
இதேபோல் சுற்றுலா பஸ்சில் வந்த  பைஜு (45), டிரைவர் முரளி (52), சிசிலி (82), சாலிவன் (18) உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு   மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
இதில் பைஜு, வெங்கட்ராஜ் ஆகிய 2 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 
காயமடைந்த மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்