புத்தாண்டையொட்டி வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டையொட்டி வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2022-01-01 16:55 GMT
வால்பாறை

புத்தாண்டையொட்டி வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை

வால்பாறையில் இந்த ஆண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் லாட்ஜ், தங்கும் விடுதி, காட்டேஜ்களில் தங்கி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.

ஆனாலும் புத்தாண்டையொட்டி நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வால்பாறையில் குவிந்தனர். இவர்கள் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மேலும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்

வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலா தலமான கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழந்தனர். ஆற்றில் தண்ணீர் குறைவாக வந்தாலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்த குளியல் போட்டனர்.
 
கொரேனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வருகிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்