ஆசைவார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்
ஆசைவார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்
ஆனைமலை
ஆனைமலை அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாலியல் பலாத்காரம்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் சகோதரி வீடு பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ளது. இங்கு அந்த வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அந்த வாலிபர் சிறுமியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அவளை டாக்டரிடம் அழைத்து சென்றனர். பரிசோதனையில், சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்தபோது, வாலிபர் ஒருவர் ஆசைவார்த்தை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.