தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.;

Update: 2022-01-01 16:34 GMT
கோவை

ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தேவாலயங்களில் பிரார்த்தனை

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட இருந்தது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலையிலும் பிரார்த்தனை நடந்தது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக காலை 6 மணி, 9 மணி, 10 மணி என பிரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியை விட்டு பங்கேற்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

சிறப்பு திருப்பலி

கோவை பெரியகடை வீதி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்குதந்தை தபேயூஸ் தலைமையிலும், ராமநாதபுரம் உயிர்த்த இயேசு ஆண்டவர் ஆலயத்தில் பங்குதந்தை உபகாரம் தலைமையிலும், ஒண்டிபுதூர் புனித ஜோசப் ஆலயத்தில் பங்குதந்தை ஆரோக்கியசாமி தலைமையிலும், காந்திபுரம் பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்கு தந்தைகள் டேனியல், மரிய ஆண்டனி ஆகியோர் தலைமையிலும், கோவைப்புதூர் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குதந்தை வினோத் தலைமையிலும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுபாடற் திருப்பலி நடைபெற்றது.

கிறிஸ்து நாதர் ஆலயம்

உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் பாதிரியார் பாஸ்கர் ராஜ் தலைமையிலும், கோவை-திருச்சி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பாதிரியார் ராஜேந்திர குமார் தலைமையிலும், காந்திபுரம் 9-வது வீதி கிறிஸ்து நாதர் ஆலயத்தில் பாதிரியார் டேவிட் பர்னபாஸ் தலைமையிலும் பிரார்த்தனை நடைபெற்றது. 

மேலும் செய்திகள்