கோவை
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளிலேயே புத்தாண்டை வாண வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிலையில் புத்தாண்டு பிறந்த அதே நாளில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று வரை 15 குழந்தைகள் பிறந்தன. அதாவது 9 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள். அதில் இரட்டை குழந்தைகளும் அடங்கும். இந்த குழந்தைகளும், தாய்மார்களும் நலமுடன் இருப்பதாக கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா தெரிவித்தார்.