போக்குவரத்து விதிகளை மீறியதாக 79 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதிகளை மீறியதாக 79 வழக்குகள் பதிவு
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 2022 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் இரவு முதல் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் வாகனம் இயக்கிய 2 பேர் உள்பட விதிமுறைகளை மீறிய 62 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து மொத்தம் 10 ஆயிரத்து 700 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. இதேபோல் நேற்று போக்குவரத்து விதிகளை மீறிய 17 பேருக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் ரூ.12,900 ரூபாய் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.