மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பஸ் டிரைவர் வேன் மோதி பலி
மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ்டிரைவர் வேன் மோதி பலியானார்.;
திருப்பத்தூர்
மோட்டார்சைக்கிளில் சென்ற அரசு பஸ்டிரைவர் வேன் மோதி பலியானார்.
திருப்பத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகன் சித்தார்த் (வயது 56), அரசு பஸ் டிரைவர். நேற்று இரவு ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஜெயசீலனுடன் (56) மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே வரும்போது பின்னால் வந்த சுற்றுலா வேன், மோட்டார்சைக்கிளின் பின்பக்கமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்தார்த் இறந்து விட்டார். ஜெயப்பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே விபத்து நடந்ததும் வேன் நிற்காமல் சென்று விட்டது.
இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.