மாவட்ட வேளாண் கருத்தரங்கு

மாவட்ட வேளாண் கருத்தரங்கு

Update: 2022-01-01 11:20 GMT
கோத்தகிரி

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை குறித்த 2 நாள் கருத்தரங்கம் கோத்தகிரி அருகே அளியூர் கிராமத்தில் உள்ள சிக்மா இயற்கை வேளாண்மைப் பண்ணையில் நடைபெற்றது. இந்திய மண் மற்றும் நீர்வள வேளாண்மை நிலையத்தைச் சேர்ந்த முனைவர் கஸ்தூரி திலகம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விளக்கி பேசினார். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிதா இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் மண் ஆய்வுக்கூட தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தி பிரேம்குமார் அங்கக வேளாண்மையின் கீழ் சான்றளிப்பு பெறும் முறைகள் குறித்து விளக்கி பேசினார். முன்னோடி விவசாயி குமரகுரு கலந்து கொண்டு இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்ததுடன், இயற்கை இடுபொருட்கள் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை துணை அலுவலர் சந்திரன் நன்றி கூறினார் இந்த பயிற்சியில் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்