காஞ்சீபுரத்தில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் அகற்றம்; அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரத்தில் அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2022-01-01 08:05 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகம் மற்றும் காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த ஜெயலலிதா படங்கள் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், தலைமையில் அதி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் பாலாஜி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூக்கடை ஆர்.டி.சேகர் அ.தி.மு.க. நிர்வாகிகள் விளக்கடி கோவில் தெரு சாலையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா பட ஸ்டிக்கர்களை 2 உணவகங்களிலும் ஒட்டினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்