மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-01-01 07:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் முருகஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு வந்தார். பின்னர் அவர் வேலையை முடித்து விட்டு சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த புட்லூர் முனீஸ்வரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வம் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து செல்வத்தின் மனைவி செல்வி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்