நெல்லை பெருமாள்புரத்தில் விநாயகர் சிலை அகற்றம் இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்

விநாயகர் சிலை அகற்றம் இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்

Update: 2021-12-31 22:30 GMT
நெல்லை:
நெல்லை பெருமாள்புரத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் சிலை
நெல்லை பெருமாள்புரம் மின்சார வாரிய அலுவலகம் அருகே ஒரு அப்பார்ட்மெண்டின் அருகில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.
இங்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து  வழிபட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த விநாயகர் சிலை, ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று அங்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் சிலையை அகற்றி எடுத்துச்சென்றனர்.
முற்றுகை போராட்டம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா, செயலாளர் சுடலை மற்றும் நிர்வாகிகள் தலைமையில் ஏராளமானோர் அங்கு சென்று விநாயகர் சிலையை அகற்றியதை கண்டித்து அந்த இடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்