நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழ பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 39). இவர் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முத்துகிருஷ்ணனிடம் கூறினார். ஆனால் அதனை மறுத்த முத்துகிருஷ்ணன், அந்த பெண்ணிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.