மின்வேலி அமைத்துகாட்டுப்பன்றியை கொன்ற முதியவர் கைது

மின்வேலி அமைத்துகாட்டுப்பன்றியை கொன்ற முதியவர் கைது

Update: 2021-12-31 21:38 GMT
சிவகிரி:
சிவகிரிக்கு மேற்கே கண்மாய் பகுதிகளிலும், தனியாருக்குச் சொந்தமான வயல் பகுதிகளிலும் வன விலங்குகளை திருட்டுத்தனமாக வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகிரி பீட் எல்லைக்கு உட்பட்ட பெரிய ஆவுடைப்பேரி கண்மாய், சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் போன்ற பகுதிகளில் சிவகிரி வனச்சரக ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனவர்கள் அஜித்குமார், மகேந்திரன், வனக்காப்பாளர்கள் பெருமாள், சுதாகர், இமானுவேல், பாரதி கண்ணன், வனக்காவலர் மணிகண்டன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆனந்தன், சரவணன், மாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.
அப்போது சின்ன ஆவுடைப்பேரி கண்மாய் அருகே கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், சிவகிரி தெற்கு தெருவை சேர்ந்த அழகர் (வயது 66) என்பவர், தோட்ட உரிமையாளருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக மின்வேலி அமைத்து காட்டுப்பன்றியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அழகரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்