கல்வித்துறை அலுவலர்கள் இடமாற்றம்
கல்வித்துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்:
கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சேலம் மாவட்ட இடைநிலை கல்வி உதவி திட்ட அலுவலர் விஜயராகவன், ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டு உள்ளார். அனைவருக்கும் கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகர், உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக மாற்றப்பட்டு உள்ளார். உடையாப்பட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், இடைநிலைக்கல்விக்கும், பனங்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாபன், அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கும் உதவி திட்ட அலுவலர்களாக மாற்றப்பட்டு உள்ளனர்.