அம்மாபேட்டை அருகே விஷம் வைத்து மயில்களை கொன்ற விவசாயி கைது

அம்மாபேட்டை அருகே விஷம் வைத்து மயில்களை கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2021-12-31 21:25 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே விஷம் வைத்து மயில்களை கொன்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.
யில்கள் இறந்து கிடந்தன
அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் ஊராட்சி மூங்கில்பாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் 9 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த 9 மயில்களையும் வனத்துறையினர் கைப்பற்றி சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.
கொன்ற விவசாயி கைது
அங்கு கோவை வன கால்நடை டாக்டர் அசோகன் மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தார். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பக்கத்து தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் மூங்கில்பாளையத்தை சேர்ந்த ராசு என்கிற குருசாமி (வயது 61) என்பவர், அவரது நிலக்கடலை தோட்டத்துக்குள் கோழிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததால் கோழிகளை கொல்ல சோள விதையில் விஷத்தை கலந்து தனது தோட்டத்தில் தூவியதும், அப்போது அங்கு வந்த மயில்கள் அந்த விஷத்தை தின்று அருகில் உள்ள துவரை தோட்டத்தில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குருசாமியை வனத்துறையினர் கைது செய்தனர்

மேலும் செய்திகள்