கைவிரல்கள் துண்டானதுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

கைவிரல்கள் துண்டானதுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.

Update: 2021-12-31 21:12 GMT
சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சபரீஸ்வரன் (வயது 24). இவருடைய மனைவி சவுமியா. இவர்கள் இருவரும் தங்கள் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சபரீஸ்வரன் கூறும் போது, ‘அம்மாபேட்டை பகுதியில் உள்ள பாலித்தீன் பை தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் நான் வேலை பார்த்தேன். கடந்த ஆண்டு பணியில் இருந்த போது மெசினில் சிக்கி எனது 2 கைவிரல்கள் துண்டாகி விட்டன. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். அதற்கு ரூ.50 ஆயிரம் செலவாகியது. அப்போது நிறுவன உரிமையாளர் மருத்துவ செலவு தொகை தருவதாக கூறினார். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் நிவாரணம் வழங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்’ என்றார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்