சிறப்பு கிராமசபை கூட்டம்
சிவகாசி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;
சிவகாசி,
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2019-2020 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சமூக தணிக்கை மேற்கொள்ள மூத்த உறுப்பினர் முத்து தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வள அலுவலர் ரமேஷ் தணிக்கை மேற்கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் உசிலை செல்வம், துணைத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய மேற்பார்வையாளர் அழகுகருப்பசாமி, கிராம ஊராட்சி வள அலுவலர்கள் கனகாபரணி, கார்த்திகை செல்வி, கிருஷ்ணபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் லட்சுமணப்பெருமாள் நன்றி கூறினார்.