மார்கழி பகல்பத்து திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் மார்கழி பகல்பத்து திருவிழா 3-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2021-12-31 20:35 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வைணவத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். மார்கழி பகல்பத்து திருவிழா 3-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருடத்தில் ஒருநாள் பகல்பத்து திருவிழா ஆரம்பிக்கும் அன்று ஆண்டாள், ெரங்கமன்னார் தனது பிறந்த வீட்டிற்கு வருவார். அப்போது அவருக்கு பச்சைக்காய்கறிகள் பரப்பியும், ஆண்டாளுக்கு பிடித்த பதார்த்தங்களை தயார் செய்தும் படைத்து வழிபடுவார்கள். அதன்பிறகு ஆண்டாள் பகல்பத்து மண்டபத்திற்கு செல்வார். பின்னர் பகல்பத்து திருவிழா தொடங்கும். வருகிற 13-ந் ேததியன்று வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன்,  நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர். நேற்று ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் செய்திகள்