முன்னாள் அமைச்சரின் உதவியாளர், டிரைவரிடம் ரகசிய விசாரணை

ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதையொட்டி முன்னாள் அமைச்சரின் உதவியாளர், டிரைவரிடம் ரகசிய விசாரணை நடத்தினர்.;

Update:2022-01-01 02:01 IST
விருதுநகர், 
முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்குகள் தொடர்பாக தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில்  ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளதற்கு திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏழுமலை, விக்னேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் ெசக்காரப்பட்டியை சேர்ந்த முன்னாள்  அமைச்சர் கே.பி. அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் மற்றும் டிரைவர் ஆறுமுகம் ஆகிய இருவரிடமும் போலீசார் தர்மபுரி சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேற்படி நான்கு பேரையும் தனிப்படை போலீசார் விருதுநகருக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தாமல் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் திருப்பத்தூரில் அ.தி.மு.க. நிர்வாகிகளை விசாரணைக்கு அழைத்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்