திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு 2 நாட்கள் விடுமுறை
திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு 2 நாட்கள் விடுமுறை;
ஜீயபுரம், ஜன.1-
திருச்சி அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வருகை தருவார்கள். குறிப்பாக விழாக்காலங்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இன்று (சனிக்கிழமை) புத்தாண்டு ெகாண்டாடப்படுவதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் கூட்டம் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட 2 நாட்களும் சுற்றுலா மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நுழைவு வாயிலில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.