அரவையை தொடங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த வடபுதுபட்டு பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த சர்க்கரை ஆலை கடந்த 3 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இந்த நிலையில் அரவை பருவத்தை தொடங்க வேண்டியும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்ககோரியும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 17-வது நாளாக கஞ்சி காய்ச்சி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.