புத்தாண்டையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

புத்தாண்டையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.

Update: 2021-12-31 18:30 GMT
காட்பாடி

புத்தாண்டையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு  சோதனை செய்தனர்.

போலீசார் தீவிர சோதனை

இன்று (சனிக்கிழமை) 2022 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டையைட்டி வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தாங்கள் சொந்த கிராமங்களுக்கும், சொந்த ஊருக்கும் பயணமானார்கள். அவ்வாறு செல்பவர்கள் ரெயில்கள், பஸ்கள் மூலம் பயணம் செய்தனர்.

ரெயில்களில் செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு யாரேனும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ெரயில்களில் கொண்டு செல்கிறார்கள் என்றும் புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டியும் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் காட்பாடி வழியாக செல்லும் ரெயில் பெட்டிகளிலும் சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர்.

கண்காணிப்பு கேமராக்கள்

காட்பாடி ரெயில் நிலைய வளாகம் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரெயில் நிலைய வளாகத்தில் யாராவது சந்தேகப்படும் வகையில் சுற்றுகிறார்களா அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதற்காக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான மானிட்டர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் உள்ளது. அங்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் சுழற்சிமுறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காட்பாடி ரெயில் நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்