மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு

கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு நேற்று நடந்தது.

Update: 2021-12-28 14:15 GMT
கம்பம்: 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8-வது தேனி மாவட்ட மாநாடு கம்பத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜப்பன் கட்சி கொடியேற்றி வைத்தார். கம்பம் நகர செயலாளர் லெனின் வரவேற்றார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. லாசர் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

 முன்னதாக மாநாட்டையொட்டி கட்சியினர் ஊர்வலமாக கோட்டை மைதானத்தில் இருந்து காந்திசிலை, வ.உ.சி திடல், பத்திர பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக மாநாட்டு அரங்கை வந்து அடைந்தனர். 

மேலும் செய்திகள்