செல்போன் கடையில் திருடியவர் கைது

மார்த்தாண்டத்தில் செல்போன் கடையில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-22 18:33 GMT
குழித்துறை,
குழித்துறை அருகே கரும்பிலாவிளையை சேர்ந்தவர் ரபின்ராஜ் (வயது 34). இவர், மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ரபின்ராஜ் கடையில் இருந்தார். அப்போது, கடைக்கு வந்த ஒருவர் ரபின்ராஜின் செல்போன்கள் பற்றி  பேசிவிட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மாயமாகி இருந்தது. அந்த நபர், ரபின்ராஜின் கவனத்தை திசைதிருப்பி செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து ரபின்ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை சேர்ந்த அரிஷ் (48) என்பவர்  செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்