ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய கரூர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய கரூர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-12-22 18:25 GMT
கரூர்
கரூர்
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி கடந்த சில தினங்களாக நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு பிரிவுகளில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 14 வயதுடையருக்கான போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நரேந்திர பிரசாத் என்ற பள்ளி மாணவர் வெற்றி பெற்று தங்க பதக்கத்தையும், 17 வயதுடையவருக்கான போட்டியில் லட்சுமி தீபக் என்ற மாணவர் வெற்றி பெற்றார். இதையடுத்து ரெயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவர்களை கரூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள்,  பொதுநல ஆர்வலர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்