திருச்செங்கோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
திருச்செங்கோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 32). விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி வீட்டு மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மேலே சென்றவர் திடீரென கீழே தவறி விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுபதி நேற்று இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.