திருச்செங்கோட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செங்கோட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர்
திருச்செங்கோடு ஏ.கே.இ. ரோடு பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் குமார். டிரைவர். இவருடைய மனைவி சாரதா (வயது 29). பெங்களூருவை சேர்ந்த இவர் தனது கணவருடன் குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சாரதா கணவரிடம் பெங்களூரு சென்று வாழலாம் என்று கூறியதாக தெரிகிறது.
விசாரணை
இந்த நிலையில் தினேஷ் குமார் வெளியூர் சென்ற நிலையில் சாரதா வீட்டில் தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.