கற்பழிப்பு வழக்கில் கைதான மகனை விடுவிக்க போலி பிறப்பு சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்தவர் கைது

கற்பழிப்பு வழக்கில் கைதான மகனை ஜாமீனில் வெளியில் கொண்டு வர போலி பிறப்பு சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-22 17:58 GMT
கோப்பு படம்
மும்பை, 
கற்பழிப்பு வழக்கில் கைதான மகனை ஜாமீனில் வெளியில் கொண்டு வர போலி பிறப்பு சான்றிதழை கோர்ட்டில் சமர்ப்பித்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கற்பழிப்பு வழக்கு
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் மாஜிநூல்லா கான். இவரது மகன் அம்ஜத் (21). மும்பை வடலாவில் தங்கி இருந்தனர். கடந்த மார்ச் மாதம் அம்ஜத் சிறுமியை கடத்தி கற்பழித்ததாக சாந்தாகுருஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 
பின்னர் அவர் மீது மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அம்ஜத்தின் தந்தை மாஜிநுல்லா கான் தனது மகன் 18 வயது நிரம்பவில்லை எனவும், அவரை ஜாமீனில் விட கோரியும் செசன்சு கோர்ட்டில் பிறப்பு சான்றிதழை சமர்ப்பித்து இருந்தார்.
போலி பிறப்பு சான்றிதழ்
இந்த சான்றிதழ் குறித்து விசாரணை நடத்த சாந்தாகுருஸ் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் போலீசார் அவரது சொந்த ஊருக்கு சென்று நடத்திய விசாரணையில், அது போலியான சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதற்கான ஆதாரத்தை போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். 
இது பற்றி விசாரணை நடத்திய நீதிபதி, போலி பிறப்பு சான்றிதழ் சமர்ப்பித்த அம்ஜத்தின் தந்தை மாஜிநுல்லா கான் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதன்படி போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலி பிறப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்