பழமையான கட்டிடம் இடித்து அகற்றம்

உத்தமபாளையத்தில் பழமையான கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2021-12-22 17:53 GMT
உத்தமபாளையம்: 


உத்தமபாளையம் பேரூராட்சி 11-வது வார்டு உட்பட்ட யோக நரசிங்கப் பெருமாள் கோவில் சந்தில் தனியாருக்கு சொந்தமான பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. கவுசல்யாவிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். 

அதன்பேரில் ஆர்.டி.ஓ. நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் பழமையான தனியார் கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் கருப்பையா ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் ெபாக்லைன் எந்திரத்தின் மூலம் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றினர்.  

மேலும் செய்திகள்