கிராம மக்கள் முற்றுகை
பாதைகேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
தேவகோட்டை,
பாதைகேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
காரைக்குடி தாலுகா சங்கராபுரம் கிராமத்தில் நூற்றுக் கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பலருக்கு பட்டா இடம் கிடையாது. இந்த நிலையில் அங்கு கடந்த 2015-ம் ஆண்டு அரசு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக 1½ ஏக்கர் பட்டா போட்டு கொடுத்து விட்டதாகவும், இதனால் பாதை இல்லாமல் செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி தேவகோட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் பூபாலசிங்கம் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த கல்பனா ஆகியோர் தலைமையில் தேவகோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட பலர் முற்றுகையிட்டனர். பின்னர் தங்களுக்கு 20 அடி பாதை வழங்க வேண்டும்.
ரத்து செய்யவேண்டும்
மேலும் முறைப்படி பட்டா வழங்காமல் முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து அந்த கிராம மக்களின் கோரிக்கையை ஆர்.டி.ஓ. பிரபாகரன் ஆய்வு செய்து வருவதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.