திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையின் மூடி
திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையின் மூடி
உடுமலை:
உடுமலை கச்சேரி வீதியில் கல்பனா சாலை சந்திப்பு அருகே 2 இடங்களில் பாதாள சாக்கடை தொட்டியின் மூடிகள் பழுதடைந்துள்ளது. அதனால் விபத்துகள் ஏற்படாதவகையில் அந்த இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.அந்த இடத்தில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கச்சேரி வீதி வழியாக அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனைகள், தாலூகா அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் வருகிறவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதனால் நகராட்சி நிர்வாகம், அந்த இடத்தில் பாதாள சாக்கடை தொட்டிகளின் மூடிகளை உடனடியாக மாற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.அதேபோன்று பல்வேறு சாலைபகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள, பாதாள சாக்கடை திட்டத்தின் மூடிகளையும் மாற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.