கள்ளக்குறிச்சியில் சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை பூம்பூம் மாட்டுகாரர்கள் முற்றுகை

கள்ளக்குறிச்சியில் சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை பூம்பூம் மாட்டுகாரர்கள் முற்றுகை

Update: 2021-12-22 17:13 GMT
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூங்கில்துறைப்பட்டு, சங்கராபுரம், கல்வராயன்மலை, தியாகதுருகம், மணலூர்பேட்டை, ரிஷிவந்தியம், தென்கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட இந்து ஆதியன் பழங்குடியின மக்கள்(பூம்பூம் மாட்டுக்காரர்கள்) வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் அவர்களின் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேல்படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பூம் பூம் மாட்டுக்காரர்கள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையி்டடனர். அப்போது தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் சாதி சான்றிதழ், வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதை அடுத்து அவர்களிடம் கோட்டாட்சியர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார். இதையடுத்து பூம்பூம் மாட்டுக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்