அனுமதி பெறாமல் எம்சாண்ட் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

அனுமதி பெறாமல் எம்சாண்ட் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

Update: 2021-12-22 17:07 GMT
உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கற்களில் இருந்து எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரிகள் இயங்கி வருகிறது. அங்கு உற்பத்தியாகின்ற எம்.சாண்ட் பல்வேறு பகுதிகளுக்கு கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட இதர பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அமராவதி பகுதியில் லாரிகள்அனுமதி இல்லாமல் எம்.சாண்ட் கொண்டு செல்வதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற வருவாய்த்துறையினர் அந்த வழியாக வந்த லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது கேரளா பதிவுஎண் கொண்ட லாரிகள் அனுமதி பெறாமல் எம்.சாண்ட் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் நேற்று முன்தினம் தும்பலப்பட்டி பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக வதந்தி பரவியது. அதைத்தொடர்ந்து அங்கு சென்ற வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் பாதை அமைக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை எச்சரித்ததுடன் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் உத்தரவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்