மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
மங்கள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
முத்தூர்,
முத்தூர் அருகே உள்ள முத்துமங்களம் மங்கள விநாயகர் கோவிலில் மார்கழி மாத மகா சங்கடஹர சதுர்த்தி பூஜை நேற்று இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு 8 மணிக்கு மங்கள விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.