பேரணாம்பட்டு பகுதியில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக நில அதிர்வு
ஒரே மாதத்தில் 3-வது முறையாக நில அதிர்வு
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக்கணவாய், கவுராப்பேட்டை, டி.டி.மோட்டூர், பெரிய பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் கடந்த 2 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.20 மணி மற்றும் 11.45 மணி ஆகிய நேரங்களில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு, கொட்டும் பனியில் தெருவுக்கு ஓடிவந்து அதிகாலை வரை நின்று தவித்தனர்.
இந்த நில அதிர்வின் காரணமாக வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பாத்திரங்கள் உருண்டன.
இது குறித்து தகவலறிந்த அமலு எம்.எல்.ஏ., பேரணாம்பட்டு முன்னாள் நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.