குளிர்பான கடையில் கர்நாடக மாநில மதுபாக்கெட் விற்றவர் கைது
குளிர்பான கடையில் கர்நாடக மாநில மதுபாக்கெட் விற்றவர் கைது
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமையில் போலிசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோமநாயக்கன்பட்டி பகுதியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது ஜோலார்பேட்டை சாலையில் சோமநாயக்கன்பட்டி கிராமம் தொம்மசிமேடு பகுதியில் உள்ள குளிர்பானக் கடையில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்ததை கையும் களவுமாக பிடித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜெய்சக்தி நகர் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் ரஞ்சித் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து டாஸ்மாக் மது பாட்டில்கள் மற்றும் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.