குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி

Update: 2021-12-22 15:54 GMT
குன்னூர்

குன்னூர் அருகே வெலிங்டன் நல்லப்பன் தெரு கிராமம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் குடியிருப்பு பகுதியில் கரடி புகுந்தது.

 பின்னர் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே சாலையில் நடமாடி கொண்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில இளைஞர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த கரடி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. 

குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். அத்துடன் அந்த கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

மேலும் செய்திகள்