108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

Update: 2021-12-22 15:39 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி சிந்தியா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த 108 ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி நோக்கி வந்தனர். ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதை தொடர்ந்து ரோட்டோரத்தில் டிரைவர் சக்திவேல் ஆம்புலன்சை நிறுத்தினார். அவசரகால மருத்துவ நுட்புனர் முத்துராஜா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, மருத்துவ சிகிச்சை அளித்தார். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், குழந்தையையும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்