நாகையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது

கஞ்சா விற்ற 5 பேர் கைது

Update: 2021-12-22 14:10 GMT
நாகப்பட்டினம்:-

நாகை தாமரைக்குளம் தென்கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (வயது 22), டேவிட்ராஜ் (19), நரேந்திரன் (28), நீலாசன்னதி தெருவை சேர்ந்த விஜயசுதாகரன் (21), ராமர்மடத்தை சேர்ந்த விஸ்வா (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்