ஆதரவு இன்றி தவிக்கும் 65 வயது திருநங்கை

ஆதரவு இன்றி தவிக்கும் 65 வயது திருநங்கை

Update: 2021-12-22 13:52 GMT
சூளகிரி:
சூளகிரி அருகே ஒம்தேதி கிராமத்தை சேர்ந்த திருநங்கை கமலம்மா. 65 வயதான இவர், அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் கமலம்மாவுக்கு, ஒரு கால் முறிந்தது. அதன்பிறகு அவரால் கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. இவருக்கு ரேஷன் அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அடடை எதுவும் இல்லை. தற்போது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வயிற்று பிழைப்புக்கு வழி இல்லாமல் நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் 65 வயதான திருநங்கை கமலம்மா, தற்போது ஆதரவு இன்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். எனவே வயிற்று பசிக்காவது அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கமலம்மா கோரிக்கை விடுத்துள்ளார். அவரது எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்