இந்து மக்கள் புரட்சி படை தலைவர் கைது

இந்து மக்கள் புரட்சி படை தலைவர் கைது

Update: 2021-12-22 13:10 GMT
கோவை

கேரளாவில் இந்து அமைப்பினரை கொலை செய்து வரும் அமைப்புகளை தடை செய்யக்கோரி அந்த அமைப்புகளின் கொடிகளை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு எரித்து இந்து மக்கள் புரட்சி படை சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இது கோவையில் மத மோதலை ஏற்படுத்தும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்து மக்கள் புரட்சி படை தலைவர் பீமா பாண்டி என்பவரை ரத்தினபுரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காட்டூர் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்