பெண் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைதான பெண் உள்பட 4பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண் உள்பட 4 பேர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
போக்சோ
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளையை சேர்ந்தவர் பண்டாரசாமி (வயது 48), இவருடைய மனைவி மாரியம்மாள் (46), இசக்கி மகன் மாடசாமி என்ற பாசி (44) ஆகிய 3 பேரையும் ஏரல் போலீசார், 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தற்கொலைக்கு தூண்டியதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதே போன்று மாசார்பட்டி அருகே உள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமை சேர்ந்த முருகையா மகன் சுஜீவன் என்ற சந்தோஷ் (22) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டம்
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், மாரியம்மாள், பண்டாரசாமி, மாடசாமி என்ற பாசி, சுஜீவன் என்ற சந்தோஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள், மாரியம்மாள் அடைக்கப்பட்டு உள்ள மதுரை பெண்கள் ஜெயிலிலும், பாளையங்கோட்டை ஜெயிலிலும் வழங்கினர்.