தீவிர தூய்மை பணியின் மூலம் 2 நாட்களில் 1,739 டன் குப்பைகள் அகற்றம் - ககன்தீப் சிங் பேடி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2021-12-22 07:03 GMT
சென்னை, 

சென்னையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகள் மாநகராட்சியின் சார்பில் தீவிர தூய்மைப்பணியின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. கனமழையின் காரணமாக நீர்வழி கால்வாய் பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளை முழுமையாக அகற்றிட ஏதுவாக கடந்த 20-ந்தேதி தீவிர தூய்மைப்பணி தொடங்கப்பட்டது.

அந்தவகையில் 2 நாட்களில் தீவிர தூய்மைப்பணியின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 655 டன் குப்பைகள் மற்றும் 1,084 டன் கட்டிட கழிவுகள் என மொத்தம் 1,739 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்