நடிகை ரம்யாவின் காதலன் யார்? - அவரே வெளியிட்ட தகவல்

நடிகை ரம்யாவின் காதலன் யார் என்று அவரே சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.;

Update:2021-12-22 02:49 IST
பெங்களூரு:

நடிகை ரம்யா

  கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்யா. இவர் கன்னட திரை உலகில் முதன்முதலில் மறைந்த புனித் ராஜ்குமார் நடித்த ‘அபி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரம்யாவின் உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா ஆகும். திரைஉலகில் அடியெடுத்து வைக்கும்போது அவருக்கு மறைந்த ராஜ்குமாரின் மனைவியான பர்வதம்மா, ‘ரம்யா’ என்று பெயர் சூட்டினார்.

  அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் நடிகர் ரம்யா நடித்தார். அதன்பிறகு அரசியலில் கால் பதித்த அவர் காங்கிரசில் சேர்ந்து எம்.பி. ஆனார். தற்போது அவர் அரசியலில் இருந்தும், திரை உலகில் இருந்தும் ஒதுங்கி இருக்கிறார். அவ்வப்போது அவர் சமூக வலைத்தளங்களில் மட்டும் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.

புனித் ராஜ்குமார் நினைவாக...

  இந்த நிலையில் அவர் மறைந்த புனித் ராஜ்குமார் நினைவாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவரது முகம் முழுவதும் மறைக்கப்பட்டு ஒரு பொம்மை அழுவதுபோல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவை வெளியிட்டு அதன் கீழ் நடிகை ரம்யா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

  உன்னை கண்டது முதல் நான் நானாக இல்லை. அந்த தருணத்தில் இருந்து எனக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. உன்னைப் போன்ற ஒரு ஆண் மகனை நான் கண்டது இல்லை. இது தான் காதல் என்றால் அதை நான் தற்போது உணர்கிறேன். நீதான் எனக்கு எல்லாம் என்றும் உணர்கிறேன். உன் மீது காதல் கொண்ட பெண்களில் நானும் ஒருவள் அப்பு, அரஸ்.’’
  இவ்வாறு ரம்யா அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வரவேற்பு

  தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரம்யாவின் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள், புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்